Breaking News
recent

யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்



யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த பதவிக்காக இமானுவேல் ஆர்னோல்ட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

எனினும் அத்தகைய தீர்மானங்கள் எதுவும் இல்லை என வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்தார்.

முல்லைத்தீவில் பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் சி.வி.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.