Breaking News
recent

ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரன் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வௌியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவர்கள் பலர் தேசிய மட்டத்தில் பிரகாசித்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரன் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரன் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
பருத்திதுறை புளோளி புற்றலை பகுதியைச் சேர்ந்த  துவாகரன் குடும்பத்தின் மூத்த பிள்ளையாவார்.
துவாகரனின் தந்தை வடமராட்சி வலய கல்விப் பணிமனையின் தொழில்நுட்ப விரிவுரையாளராக பணியாற்றுவதுடன் அவரது தாய் பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியில் வர்த்தக ஆசிரியராக கடமையாற்றுகிறார்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஜயராஜன் போல் ஜயன்ஸன் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தொழில்நுட்பவியல் துறையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியலில் தோற்றிய வேம்படி மகளிர் கல்லூரி மாணவி கமலேஷ்வரி செந்தில்நாதன் அகில இலங்கை ரீயிலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கணேஷமூர்த்தி துதிஷன் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக துதிஷன் முச்சக்கர வண்டி ஓட்டி மாலை நேரங்களில் உழைத்துள்ளார்.


இதேவேளை இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய 253,453 மாணவர்களில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் அதீத திறமையை வௌியிட்டுள்ளனர்.
மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரியின் திலினி சுனீதா உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்தின் பீ.பீ ரன்சிறிகே ஹெட்டியாரச்சி பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் திலானி ரஸன்திகா வணிக பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 160,104 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பல்வேறு குளறுபடிகள் மற்றும் தவறுகள் காரணமாக 205 மாணவர்களின் பெறுறேுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பெறுப்பேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.