Breaking News
recent

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை அணி

இந்தியாவிற்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 112 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் முதல் 7 விக்கெட்டுக்களும் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் மஹேந்திர சிங் தோனி 65 ஓட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது அதி சிறந்த பந்துவிச்சு பெறுதியை பதிவு செய்த சுரங்க லக்மால் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய இலங்கை அணி 19 ஓட்டங்களுக்கு முதல் 2 விக்கெட்டுக்களையும் இழந்தது.
என்றாலும் சவாலாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 49 ஓட்டங்களைப் பெற்றார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.