Breaking News
recent

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்! இலங்கையிடம் வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்துவைப்புகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குழு கடந்த 4ஆம் திகதிமுதல் இன்றுவரை இலங்கையில் தமது அவதானிப்புக்களை மேற்கொண்டது. அதன் முடிவில், தமது அவதானிப்புகள் குறித்து, இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்ட குறித்த குழுவினர்,
நாடுமுழுவதும் தன்னிச்சையான தடுத்துவைத்தல்கள் காரணமாக இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பது மீது குறிப்பிடத்தக்க சவால்களை அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பொறிமுறைகளுடன், செயற்படுவது தொடர்பாகவும், சித்திரவதைகளுக்கு எதிரான சமவாயத்தின் ஆரம்ப வரைவுக்கு இணக்கப்பாட்டை தெரிவித்தமை குறித்து சாதகமான முன்னெடுப்புகளை அங்கீகரிப்பதாக இந்த நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், பாதுகாப்புப் படையினர், நீதித்துறையினர் மற்றும் ஏனைய அதிகார சபைகள் தனியாட்கள் சுதந்திரத்துக்கான உரிமைகளுக்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை.
தனியாட்களுக்கு சுதந்திரத்தை இழக்கச் செய்யும் தற்போதைய அதிகாரங்கள் பரந்துபட்ட நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், திறந்த வேலை முகாம்கள், இளம் மற்றும் முதியோருக்கான இல்லங்கள், மனநல சுகாதார நிலையங்கள், முன்னாள் போராளிகளுக்கும், நலிவுறும் சூழ்நிலைகளில் வாழ்வோருக்கும் உரிய புனர்வாழ்வு நிலையங்கள் இவற்றுல் அடங்கும்.
அனேகமான சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் அல்லது வலுக்கட்டாயமாக பெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் உடன் கவனம் செலுத்தி மறுசீரமைப்புகளுடன் அணுக வேண்டிய முக்கிய பிரச்சினைகளாகும்.
மிக அதிகமான விளக்கமறியல் சிறைகளை பயன்படுத்துதல், காலம் கடந்த சட்ட நடைமுறைகள் என்பன குறித்தும் மறுசீரமைப்புகள் அவசியம்.
சந்தேகத்துக்குரியவர்கள் நியாயமற்ற முறையில் காலவரையரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் நீதிமன்ற நடவடிக்கைள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் குற்றமற்ற தன்மை பற்றிய ஊகிப்பு மற்றும் குறித்துவைக்கப்பட்ட செயல்முறைக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமை பற்றியும், ஐக்கிய நாடுகள் குழு தமது அவதானிப்புக்களை செலுத்தியுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.