Breaking News
recent

யாழில் தேசிய மீலாத் விழா.. பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார் ஜனாதிபதி.



(- எஸ்.நிரூஜன்.)
யாழில் தேசிய மீலாத் விழா எதிர்வரும் சனிக்கிழமை (23) ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார். 

இந்நிலையில் ஒஸ்மானியாக் கல்லூரி வர்ணம் பூசப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வருவதுடன் நிகழ்வுக்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்றுவருகின்றது.


தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.