Breaking News
recent

யாழில் தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்.

2017.12.06 ஆம் திகதிய 2048/30 இலக்க அரச வர்த்தமானிய அறிவித்தலின் பிரகாரம் தேங்காய் ஒன்றின் விலையாக ரூபா 75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சில்லறை விலைக்கு மேலதிகமாக உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பொதிசெய்பவர் விநியோகஸ்தர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கட்டளையின்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சகல வர்த்தகர்களும் பின்பற்றுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

போதுமான மழை வீழ்ச்சி இல்லாத காரணத்தினால் தேங்காய் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தேங்காய் பால்மா கம்பனிகள் , பிஸ்கட் கம்பனிகளின் அதிக கொள்வனவினாலும் தட்டுப்பாடு நிலவுகின்றது. தேங்காய் உற்பத்தி வழமை நிலைக்குத் திரும்ப, 2019 அல்லது 2020 ஆம் ஆண்டாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.