Breaking News
recent

தீவக மாணவி படுகொலை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு


ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன்   முன்னிலையில்    இன்று (20-12-2017)  புதன்கிழமை  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , சந்தேகநபரால் அச்சுறுத்தலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், ட்ரயல் அட்பார் மன்றில் சாட்சியமளித்திருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும், நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே சந்தேகநபருக்கு விளக்கமளித்திருந்த போதும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

எனவே அடுத்த வழக்கு தவணையின் போது சந்தேகநபருக்கான கட்டளை பிறப்பிக்கப்படும் என பதில் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.