Breaking News
recent

யாழில் இந்த வருடம் ஐயாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு

டெங்கு காய்ச்சல் வருடாந்தம் பெறுமதியான உயிர்கள் பலவற்றை காவுகொள்கின்றது.

யாழ். மீசாலையை சேர்ந்த இளம் தாய் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் பிரவசத்திற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான லக்ஸன் கிருத்திகா டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
விவசாய போதனாசிரியரான இவரது மரணம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழ். குடாநாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5,783 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கா.நந்தகுமாரன்கூறியுள்ளார்.
யாழ். மாநகர பகுதி, சாவகச்சேரி.உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய இடங்களிலேயே டெங்குகாய்ச்சல் அதிகம் பரவியுள்ளது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் 905 டெங்கு நோயளார்கள் பாதிவாகியுள்ளனர்.
இவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோயியலாளர் டொக்டர்.ஏ.ஆர்.யூட்.பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதே இந்த காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.