Breaking News
recent

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி நிறைவேற்றம்

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்காக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 44 மேலதிக வாக்குகளால் வர்த்தமானி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே வாக்குப்பதிவு இடம்பெற்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.