Breaking News
recent

எமது இணைய தள பிரதான செய்தியாளருக்கு எதிராக அவதுறான செய்திகளை வெளியிட்ட இனந்தெரியாத இணையதளம்!


யாழ் கல்வியங்காடு புதிய செம்மணி
வீதியில் கடந்த (02-12-2017) ம் திகதி சனிக்கிழமை நடந்த மரண வீட்டில் மது போதையில் வந்த இளைஞர் ஒரு தனது வீட்டு முகவரிஜை தவறவிட்டு மரண வீட்டின் முன் நின்ற நபர்களிடம் சுயநினைவின்றி இரவு 9.00 மணியளவில் அட்டகாசம் செய்துள்ளார். இதனை அவதானித்த இளைஞர்களில் சிலர் அவர் விபரங்களை அவரது சாதாரன கையடக்க தொலை பேசி மூலம் அவரது அண்ணாவோடு தொடர்பு கொண்டு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள அவரது விடுதியில் விடுதியுரிமையாளரோடு கதைத்து விட்டு குறித்த நபரை விட்டு வந்துள்ளனர்.


இதன் பிற்பாடு (03-12-2017) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மரணச்சடங்குக்கான வேலைகளை புதிய செம்மணி வீதி இளைஞர்கள் மற்றும் உறவினர்கள் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நபர் மீண்டும் நள்ளிரவு (03-12-2017) ஞாயிற்றுக்கிழமை 12.10 மணிக்கு மரண சடங்கு இல்லத்தின் உள்ளே நேரடியாக சென்று பிரேதத்தின் முன் அமர்ந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் இவர் யார் என வினாவியதோடு குறித்த நபரை அட்டகாசம் செய்யாது இது மரண வீடு செல்லுமாறு பணித்திருந்தார். அதற்கு குறித்த இளைஞர் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை எற்படுத்தியதோடு மீண்டும் இளைஞர்களோடும் தகறாறில் ஈடுபட்டமையால் குறித்த நபர் மரண வீட்டின் வாயிலில் பிளாஸ்டிக் கதிரையில் கட்டி வைத்து விட்டு கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தொலைபேசியுடாக அழைத்த போது அவர்கள் தமிழ் தெரியாது கதைப்பதற்கு ஒருவரும் இல்லை வர வேண்டும் என அழைப்பை துன்டித்து விட்டார்கள். அதன் பிற்பாடு நள்ளிரவு 1.00 மணிக்கு நேரடியாக சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிஸார் உடனடியாக வந்து பார்வையிட்டு வீட்டு உரிமையாளர் வாக்கு மூலத்தை பெற்றதையடுத்து குறித்த நபரை விசாரணை செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காலை 8.30 மணிக்கு பொலிஸார் விசாரணைக்கு அழைத்ததோடு குறித்த இளைஞரின் வாக்கு மூலத்தையும் பெற்றுக்கொண்டனர். குறித்த நபர் அப்போது மது போதையில் வீட்டு முகவரிஜை தவற விட்டுச்சென்ற போது தனது பெறுமதிமிக்க தொலைபேசி ஒன்றை காணவில்லை என முறைப்பாடு செய்திருந்தார். அதனை எடுக்கவே மீண்டும் நள்ளிரவில் மரணவீட்டிற்கு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் இரு தரப்பினரும் சமரசத்தில் செல்வதாக தெரிவித்தமையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைஜை முடிவிற்கு கொண்டுவந்தனர்.

மேலும் குறித்த நபரிடம் கையடக்க தொலைபேசியின் ஆதாரங்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரும் படியும் முறைப்பாட்டை பதிவு செய்து தாம் வழக்கை நீதிமன்றுக்கு கொண்டு சென்று தொலைபேசிஜை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைஜை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தின் உண்மை தன்மைஜை தெளிவாக உறுதிப்படுத்தாமல் online ceylon.net என்னும் ஊடக இணையதளம் ஒன்று புதிய செம்மணி வீதி மகேந்திரன் பிரகதீஸ் என்பவருடைய புகைப்படங்களை முகநூலில் இருந்து எடுத்து அவருக்கு எதிராக பொய்யான அவதுறான செய்திகளை வெளியிட்டுள்ளது. அத்தோடு அரசியல் பக்க பலங்களை வைத்து அடிதடியிலிருந்து தப்பித்து வருவதாகவும் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றது.

குறித்த இணைய தளத்தின் இத்தகைய செயற்பாட்டால் மகேந்திரன் பிரகதீஸ் குடும்பத்தார்  மன உளைச்சளுக்கு உள்ளானதோடு அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது.

மகேந்திரன் பிரகதீஸ் எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த விடயத்தில் தெரியவருவது ...,

எமது  மின்னல் இணைய தள பிரதான  செய்தியாளர்  தங்கராசா ஷாமிலனின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும்  வகையில் அவதுறான செய்திகளை வெளியிட்டுள்ளது.

சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் இருப்பதாக செய்தியாளர் மின்னஞ்சல் ஊடாக உண்மை தன்மைஜை  தெரியப்படுத்திய போதும் குறித்த இணையதளம் மறுப்பு செய்தியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த online ceylon.net இணைய தளம்

பாராளுமன்ற மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படாத இணைய தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த இணையத்தில் (06-12-2017) பிரசுரம் செய்யப்பட்ட புதிய செம்மணி வீதி மரண வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் உறுதி  செய்யப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.