Breaking News
recent

சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரலையால் உயிர்நீத்த இலட்சக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்று காலை 09.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகளும், அனர்த்த முன்னெச்சரிக்கை தௌிவூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்களிற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பில் தௌிவூட்டும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி, புதுமுகத்துவாரம், திருச்செந்தூர், நாவலடி பகுதிகளில் இடம்பெற்றன.
அத்துடன் கல்முனை கடற்கரையிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த மக்கள் கண்ணீருடன் தங்களின் உறவிகளுக்காக பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சுனாமியால் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.