Breaking News
recent

119 அவசர பொலிஸ் சேவை பெயரளவில்தானா உள்ளது? மக்கள் குற்றச்சாட்டு

கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் அட்டகாசம் செய்வதாக இலங்கையின் அவசர பொலிஸ் சேவை இலக்கம் 119இற்கு தெரிவிக்கப்பட்ட போதும் நீண்ட நேரமாகியும் இந்த இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இது தொடர்பில் தொடர்ந்தும் மக்கள் தெரிவிக்கையில்,

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்று வரும் காலப்பகுதியிலும் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவிரவாக கூரிய ஆயுதத்துடன், கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் வீதியில் நின்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அயலிலுள்ளவர்களை சண்டைக்கு அழைக்கின்றார்.

குறித்த நபரின் அட்டகாசம் தொடர்பில் இலங்கையின் அவசர பொலிஸ் சேவை இலக்கம் 119இற்கு தகவல் வழங்கப்பட்டு, நீண்ட நேரமாகியும் இந்த இடத்திற்குச் பொலிஸார் வருகைதராதது அந்த நபரின் செயற்பாடுக்கு ஊக்கமளிப்பதாக அமைகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் சிவபுரம் கிராமத்தில் தினமும் நிறை மதுபோதையில் நின்று தனது மனைவி, பிள்ளைகளை வீதியில் வைத்துத் தாக்கியும், வீதியால் செல்பவர்களை வலிந்து சண்டைக்கழைத்து உரத்த குரலில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திப் தினமும் அட்டகாசம் செய்வதாக நேற்று இரவு 10.30 மணியளவில் இலங்கை அவசர பொலிஸ் சேவை இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

ஆனால் இன்று காலை 5.30 மணியாகியும் எந்தவொரு பொலிஸாரும் இந்த இடத்திற்குச் செல்லவில்லை. குறித்த நபரின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.இந்த நபரின் அட்டகாசம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் பொலிஸ் சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பொலிஸ் சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிவபுரத்தில் கஞ்சா வியாபாரிகள், பாவனையாளர்களின் அட்டகாசம் தொடர்பில் பல தடவைகள் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காது, பாராமுகம் அவர்களுக்கு ஊக்குவிப்பதாகவே அமைகின்றது என இந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.