Breaking News
recent

மனைவியின் உடலில் தீ பற்றவைத்து கொலை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை

வடமராச்சி குடத்தனையில் மனைவியின் உடலில் தீ பற்ற வைத்து கொலை செய்த குற்றத்துக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று குறித்த குடும்ப தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

வடமராச்சி மணற்காடு குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி மேரி ஜிமில்ட்டா என்ற இளம் குடும்ப பெண் உடலில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரை கொலை செய்த குற்ற சாட்டில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் மனைவியின் உடலில் மண்னென்நெய் ஊற்றி கொலை செய்த குற்ற சாட்டை முன் வைத்து சட்ட மா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு இடம் பெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்புக்கு திகதி இடப்பட்டிருந்தது.வழக்கு தொடுனரால் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படாததால் எதிரி கைமோச கொலை புரிந்துள்ளார் என்று மன்று முடிவுக்கு வருகின்றது.அந்த குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறையும்,அத்துடன் குற்றவாளிக்கு 5 ஆயிரம் ரூபா தண்டமும் செலுத்த வேண்டும் எனவும் அதை செலுத்த தவறும் பட்ச்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.