Breaking News
recent

பேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்கிய மனைவி: முகத்தை கொடூரமாக சிதைத்த கணவன்.

உருகுவே நாட்டில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவன் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உருகுவா நாட்டில் அஸன்சியன் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து முகம் புனரமைப்பு அறுவை சிகிச்சைக்கு குறித்த இளம்பெண் தயாராகி வருகிறார்.

அஸன்சியன் பகுதியில் குடியிருக்கும் Adolfina Camelli Ortigoza(21) என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இது அவரது கணவரான Pedro Heriberto Galeano(32) என்பவருக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. பேஸ்புக் பதிவுகளுக்கு தம்மை விட தமது மனைவி அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாத அந்த நபர், தமது மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்குகளுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கத் துவங்கியுள்ளார்.

இது ஒருகட்டத்தில் குறித்த இளம்பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்த இளம்பெண்ணின் தோழிக்கு தெரிய வரவே, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த குறித்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.

பொலிசாரால் மீட்க்கப்படும்போது அவரது உதடுகள் பிய்ந்து இருந்துள்ளது. முகம் உருவம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. வலியால் வாய்விட்டு கதறாமல் இருக்க தாக்குவதற்கு முன்னர் தமது மனைவியின் வாய்க்குள் துணியை திருகி நிறைத்துள்ளார். இதனால் பற்கள் எதுவும் பெயர்ந்து போகாமல் இருந்தது.

இந்த நிலையில் அந்த நபரின் தந்தை தமது மகனின் கோடூர நடவடிக்கையில் மனம் நொந்து பொலிசாருக்கு நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பொலிசார், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.