Breaking News
recent

நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பாரிய மாற்றத்தை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது - பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா





வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பாரிய மாற்றத்தை சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாததத்தில் நேற்று உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.



இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,


சமகால அரசாங்கம் பதவியேற்ற பொழுது இந்த நாடு பாரிய கடன் சுமையினால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தது.


அந்த நிலைமையை மாற்றுவதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் அடிப்படையில், வினைத்திறன் மிக்க பொருளாதார கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன. இதன் மூலம் கடன் பளுவை கிரமமாக குறைக்கக்கூடிய விசேட பொறிமுறை ஒன்றும் உருகாக்கப்பட்டது என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.



ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் நிதி நிலைமை பலமடைந்துள்ளது. வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை மீள கட்டியெழுப்பி, எழுச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடிந்ததாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.