Breaking News
recent

கோப்பாய் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் யாழ்.கோப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய். மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டமை, திருட்டு சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து வாளொன்றும், தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.