Breaking News
recent

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். பதில் நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்று மன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நல்லூர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.