Breaking News
recent

கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பு மாவீரர் நாள் நினைவஞ்சலி நிகழ்வு எழிச்சி

எஸ்.நிரூஜன்
கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பு மாவீரர் நாள் நினைவஞ்சலி நிகழ்வு மிகவும் எழிச்சியுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.


துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற நிகழ்வில் மாலை 6.05 இற்கு பிரதான சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை சின்னத்தம்பி அப்புலிங்கம் என்பவர் ஏற்றிவைத்து நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுடன் புலிகளின் மாவீரர் நினைவஞ்சலி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டது. அத்துடன் ஐதரசன் கூண்டு பரசூட் விளக்குகள் வானில் விடப்பட்டன.

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றதுடன் வடமாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசனும் வருகைதந்திருந்தார். மேலும் பெருமளவான மக்களும் வருகை தந்து தீபம் ஏந்தி பூ தூவி அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத்தினர் தமது முகாம் வாயிலினை மறைத்து வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததுடன் புகைப்படம் எடுத்தனர். எனினும் அங்கு வந்த எவரையும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியோ மாவீரர் நினைவஞ்சலி நிகழ்வை குழப்பும் செயற்பாட்டிலோ ஈடுபடவில்லை. புலிகளின் பாடல் ஒலித்த போதும் எந்த தடையும் ஏற்படுத்தாது அவதானித்துக்கொண்டிருந்தனர்.








Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.