Breaking News
recent

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

எஸ்.நிரூஜன்
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 


இதனால் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. இதனால் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்

கடந்த 18 ஆம் திகதி வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய்த போதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் தொடர் பணிபுறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

நாளைய தினம் பஸ் சேவைகள் மீள இடம்பெறும் என்பது மாலையே தெரியவரும் என போக்குவரத்து சபை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.