Breaking News
recent

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாணவர்கள் உயிரிழப்பு: வழக்கு ஒத்திவைப்பு

யாழ். கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று யாழ். பதில் நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது குறித்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு யாழ். பதில் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.