Breaking News
recent

முகாம் வாயிலில் ஒன்றும் செய்ய வேண்டாம் வீதிக்கு மறுபக்கம் செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை - இராணுவம் தெரிவிப்பு

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இராணுவத்தினரின் கண்காணிப்பின் மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்தவர்களால் சிவப்பு மஞ்சள் கொடிகள், மாவீரர் நாள் பனர்கள் கட்டும் பணிகள் இடம்பெறுகின்றன. 


ஆரம்பத்தில் இன்று காலை  சிறு குழப்பம் இராணுவத்தினருடன் ஏற்பட்டபோதும் பின்னர் பிரச்சினையின்றி மாவீரர் நினைவஞ்சலி ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. 

வீதியில் வளைவு கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து வீதியின் அருகில் பனர் அமைக்கும் பணிகள் இடம்பெறுகிறது.

இராணுவத்தை சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்; 

தமது முகாம் வாயில் பகுதியில் ஒன்றும் செய்ய வேண்டாம் வீதிக்கு மறுபக்கம் செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை முகாமினை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றார்.
எஸ்.நிரூஜன்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.