Breaking News
recent

பிரபாகரனுக்கு கேக் வெட்டியதால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் தமிழ்

சிங்கள சமூக வலைத் தளங்களில் தமிழ் மாணவர்களின் புகைப்படங்கள் தவறாக பிரசுரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் தமிழ் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருவதாக யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் பொய்த் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனால் தமிழ் மாணவர்கள் சைபர் கிரைம் பிரிவில் முறையிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலையைத் தொடர்ந்து பல்வேறு சிங்கள சமூக வலைத் தளங்களில் அங்கு கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் புகைப்படங்கள் அவதூறாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் தேவையற்ற வசனப் பிரயோகங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் தமிழ் மாணவர்கள் பயங்கரவாதிகள் என்ற வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் தமிழ் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அதை அவதானித்த சிங்கள மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
இதனால் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.