Breaking News
recent

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளியின் கன்னத்தில் அறைந்த வைத்தியர்!

யாழ் போதனா வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவரை சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தாக்கியதாகவும், பிரேத அறையில் வைத்து கண்ணை குத்த வேண்டும் என தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண், யாழ் போதனா வைத்திய சாலைக்கு கடந்த 23 ஆம் திகதி தனது கண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளச் சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் கண்ணை பரிசோதனை செய்த போது அவர் தலையை சற்று அசைத்துள்ளார். அப்போது குறித்த வைத்திய நிபுணர், அந்த பெண்ணில் கன்னத்தில் பளார் பளார் என மூன்று தடவைகள் கன்னத்தில் அறைந்துள்ளார்.


தொடர்ந்து, ”இந்த மிருகங்களை யார் இங்கு கொண்டு வந்தது? இதுகளை பிரேத அறையில் வைத்து தான் கண்ணை குத்த வேண்டும்” என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் உதவிக்கு நின்ற சக வைத்தியர்களையும் திட்டி தீர்த்தார்.

இந்நிலையில், இவர்களை நம்பி எவ்வாறு நாம் சிகிச்சைக்கு செல்வது என குறித்த பெண் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கிடைத்தால் அது தொடர்பில் விசாரிப்பதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.