Breaking News
recent

வாள்வெட்டு சந்தேகநபர்கள் கொக்குவில் பகுதியில் கைது!

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (18) இரவு யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கொக்குவிலிலுள்ள புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று இரவு நீண்ட நேரமாக நின்றுள்ளனர்.இது தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய யாழ். தலைமைப்பீட பொறுப்பதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான சந்தேகநபர்கள் தங்கள் வசம் வைத்திருந்த கைத்தொலைபேசிகளில் வாள்வெட்டுக்குழுவோடு அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.