Breaking News
recent

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்



வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல தசாப்த்தங்களுக்கு முன்னதாக வலுவான அரச சேவை நாட்டில் இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட அரசியல் தலையீடு காரணமாக அரச சேவை சீர் குலைந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஊழல் மோசடியில் ஈடுபடுவது தொடர்பில் நாட்டிற்குள் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.