Breaking News
recent

ஆவா குழு மீண்டும் எழுச்சி பெற முடி­யாது : அமைச்சர் சாகல ரத்­னா­யக்க !!



மாகா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற ”ஆவா” குழு­வி­னரை அழிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்­துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

வட­மா­கா­ணத்தில் செயற்­பட்டு வரும்’ ஆவா”பாதாள குழு­வினர் மீண்டும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ள­தாக சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இது தொ­டர்பில் ஊட­கங்­களில் பல செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஆவா குழு­வினர் மீண்டும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

கடந்த இரு தினங்­க­ளுக்குள் அவர்­களின் 8 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அச்­சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய 6 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஏனைய சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்­கான விசா­ர­ணை­களை துரி­த­மாக மேற்­கொள்ளும் முக­மாக யாழ்ப்­பாண பொலிஸ் பிரிவின் அதி­கா­ரி­களின் விடு­மு­றைகள் தற்­கா­லி­க­மாக இரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்தில் மட்­டு­மன்றி தெற்­கிலும் இயங்கி வரும் பாதாள குழு­வி­ன­ரது செயற்­பாட்­டினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

வெளி­நா­டு­களில் மறைந்­துள்ள பாதாள குழு­வினர் பற்­றிய தக­வல்கள் உட்பட அவர்களது செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கண்டுபிடித்துள்ளோம்.

அவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.