Breaking News
recent

தமிழ் ஈழ தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான்

தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான் என முன்னாள் போராளியொருவரின் தந்தையான மு.மனோகரன் கூறியுள்ளார்.

அத்துடன், பிரபாகரனது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்க முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்க முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது.அத்தோடு மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.