Breaking News
recent

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடு: அர்ஜூன ரணதுங்க

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடு என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதாக ஊடக சந்திப்பொன்றில் அவர் குறிப்பிட்டார்.
அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்பட்ட பொய் பிரசாரம் தொடர்பில் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.