Breaking News
recent

வௌ்ளை வேனில் சென்று ஆவா குழு உறுப்பினரைக் கைது செய்த பொலிஸார்

யாழ். பிரதான பஸ் நிலைய வளாகத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வேனில் சென்று சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உத்தியோகப்பூர்வ வாகனத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளுமிடத்து சந்தேகநபர் தப்பிச் செல்வார் என்பதால் வெள்ளை வேனில் சென்று சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரின் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் வாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
16 வயதான குறித்த சந்தேகநபர் கடந்த ஒரு மாதமாக பாடசாலை செல்லாது யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த வாரம் கோப்பாயில் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சந்தேகநபர்களில் சிலர் வெளிமாவட்டங்களுக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.