Breaking News
recent

எம்மால் எதனையும் செய்ய முடியாது- இராணுவ ஊடகப் பேச்சாளர்.


வடக்­கில் மாவீ­ரர் தினத்­தை­யும், பிர­பா­க­ர­னின் பிறந்த தினத்­தை­யும் கொண்­டா­டி­யதாகத் தக­வல்­கள் பதி­வா­கி­யுள்­ளது. எனி­னும் எம்­மால் எதை­யும் செய்ய முடி­யாது. இவ்­வாறு இரா­ணுவ ஊட­கப்­பேச்­சா­ளர் மேஜர் ஜென­ரல் ரொசான் சென­வி­ரத்ன தெரிவித்தார். 


அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புலி­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் வடக்­கில் சில சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக இரா­ணு­வத்­தி­ட­மும் சில முறைப்­பா­டு­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
மக்­க­ளைக் குழப்­பும் சம்­ப­வங்­க­ளா­கவே நாம் இவற்­றைக் கரு­து­கின்­றோம். வடக்­கில் போரில் உயி­ரி­ழந்த பொது­மக்­களை நினை­வு­கூரத் தடை­கள் விதிக்­கப்­ப­ட­வில்லை. புலி­களை நினை­வு­கூ­ரு­வது தவ­றான ஒன்­றா­கும். இது பொது­மக்­க­ளுக்­கும் தெரிந்த விடயமே. எனி­னும் இவ்­வாறு இடம்­பெற்­று­வ­ரும் சம்­ப­வங்­கள் குறித்து எம்­மால் எந்த நடவ­டிக்­கை­யும் முன்­னெ­டுக்க முடி­யாது.

அதற்­கான அதி­கா­ரம் எமக்கு இல்லை. பொலி­ஸாரே இது­கு­றித்து விசா­ரிக்க வேண்­டும். அதற்­கான ஒத்­து­ழைப்­பு­களை எம்­மால் வழங்க முடி­யும்.

விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.