Breaking News
recent

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண்ணான மேரி ரம்சிகா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம், வழக்கின் இரண்டு சந்தேகநபர்களும் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணான மேரி ரம்சிகா படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.