Breaking News
recent

வாள்வெட்டு சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை! வடக்கு ஆளுநர் உறுதி


யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, வடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே ஆளுநர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.இச்சம்பவங்கள் குறித்து தான் கவனஞ்செலுத்தி வருவதாக குறிப்பிட்ட ஆளுநர், தகுந்த நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர்படுத்துவதாக குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது இடம்பெற்று வந்த வாள்வெட்டுச் சம்பவங்கள், கடந்த இரண்டு வார காலமாக அடிக்கடி நடைபெறும் ஒன்றாக மாறிவிட்டது. கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் 8 வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, இதில் 10இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு, மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு வருவதோடு, சில பொருட்களை கொள்ளையிட்டும் செல்கின்றனர். இவ்வாறான சம்பவங்களால் மக்கள் நிலைகுலைந்து போயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ள போதும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.