Breaking News
recent

வவுனியாவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ 266 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது


வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் 3 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ 265 கிராம் ஹெரோயின் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே நேற்று  முன்தினம்  (09.11.2017) மாலை ஹெரோயினுடன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட இருந்த நிலையிலேயே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து குறித்த ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டதுடன், அதனை எடுத்துச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 52 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3 கோடி என வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அதிபர் தெரிவித்துள்ளதுடன், வவுனியாவில் பெரியளவில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாந்து ஆகியோரின் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.ஆர். மஹிந்த தலைமையிலான பொலிசாரே குறித்த ஹெரோயினை கைப்பற்றினர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.