Breaking News
recent

24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு நாவற்குழி மற்றும் மறுவன்புலவு பகுதிகளில் வைத்து 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 24 இளைஞர்களில் 9 பேரின் உறவினர்களால் தொடரப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டு வரை யாழ். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக 2003 ஆம் ஆண்டு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுவரையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில், காணாமலாக்கப்பட்ட மூன்று இளைஞர்களின் உறவினர்கள் இணைந்து யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது
புதிதாக தாக்கல் செய்யப்படட மூன்று ஆட்கொணர்வு மனு மீதான வழக்கினை எதிர்வரும் 14 திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.
அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட வழக்கின் விபரத்தினை அறிந்து நீதிமன்றிற்கு தெரியப்படுத்துமாறு வழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.