Breaking News
recent

அச்சுவேலியில் வீட்டினுன் புகுந்து கொள்ளை: 20 வயதான இளைஞர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 15 இலட்சம் பெறுமதியான தங்காபரணங்களையும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நேற்று (10) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்ததேகநபரை விசாரணையின்  மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.