Breaking News
recent

யாழில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

2012 ஆம் ஆண்டில் 15 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 6 பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் யாழ். வடமராட்சி மணற்காடு பகுதியில் வைத்து சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
சந்தேகநபருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை நிறைவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பை அறிவித்தார்.
சிறுமிக்கு 6 இலட்சம் நட்ட ஈடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 1 அரை வருட கடூழிய சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் கடுமையான தண்டனை வழங்குவதே சட்டத்தின் தேவையாகும் எனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.