Breaking News
recent

துன்னாலை பகுதியில் அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மூவர் கைது

யாழ். துன்னாலை பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி யாழ். துன்னாலை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.இந்த சம்பவத்தையடுத்து பொலிஸாரின் வாகனங்கள் மற்றும் காவலரண்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன், அந்த பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இன்று அதிகாலை யாழ். துன்னாலை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.