Breaking News
recent

ஜிமிக்கி கம்மல் பாடல் ஒரே நாளில் பிரபலம் ஆனது எப்படி ? நீங்களும் பார்த்து மகிழுங்கள்!

மோகன்லால் நடித்துள்ள Velipadinte Pusthakam என்ற படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் கேரளா ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

இந்த பாடலுக்கு கேரள இளம் பெண்கள் சிலர் நடனம் ஆடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலின் வீடியோவை ஜிம்மி கிம்மல் என்ற ஹாலிவுட் பிரபலத்திற்கு ஷேர் செய்து இந்த பாடலை நீங்கள் கேட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், இப்போது வரை இல்லை, ஆனால் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கிம்மல் என்கிற ஜிம்மி கிம்மல் அமெரிக்க சினிமாவில் காமெடியனாக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக, தொகுப்பாளராக நிறைய விஷயங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.