Breaking News
recent

சீ.ஐ.டி.க்கு பொறுப்பாக மூன்று பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுதத் நாகஹமுல்ல, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்ட பின்னர் அப்பதவி சில வாரங்கள் வரை காலியாகவே இருந்தது.

இதன் பின்னர் கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரபலமான பொலிஸ் அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர அப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவரது நியமனத்தை விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் தனது நண்பரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா என்பவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார். எனினும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு ஷானி அபேசேகரவை அப்பதவிக்கு நியமித்திருந்தது.

இதற்குப் பதிலடியாக பொலிஸ் மா அதிபர் தற்போது மேலதிகமாக இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக நியமித்துள்ளார்.

அதன் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோரையே பொலிஸ் மா அதிபர் சீ.ஐ.டி.க்குப் பொறுப்பாக நியமித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைகளில் கயிறிழுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.