Breaking News
recent

"ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா - சட்டத்தரிணிகளின் தொகுப்புரை"

வித்தியா கொலை 17வது நாள் ட்ரயல் அட்பார் மன்றில் நேற்று சட்டத்தரணிகள் தரப்பு தொகுப்புரையின்போது "1, 2, 3, 6, 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஜெயவர்த்தன தனது தொகுப்புரையில் 'இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்லான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன் நிறுத்தியுள்ளது குறித்த சாட்சி ஏற்கனவே மோசடி குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபராவார் அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது அந்த சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது சுவிஸ்குமார் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டார் எனில் ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை அதேபோல் மன்றில் குற்ற செயலை கண்ணால் கண்ட சாட்சி என முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும் முரண்பாடாக சாட்சியமளித்துள்ளன.


 சுரேஷ்கரன் என்பவர் சாட்சியமளிக்கையில் துஸ்பிரயோகத்தை வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என கூறினார் அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் வீடியோ புகைப்படம் எடுத்தது என சாட்சியமளித்தார் இந்த இரு சாட்சியங்களும் முரணாகவே உள்ளது எனவே இந்த குற்ற சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை' என்றார்.
அதனை தொடர்ந்து 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ரகுபதி தனது தொகுப்புரையில் 'இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தப்பட்ட சுரேஷ்கரன் என்பவர் தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என சாட்சியமளிக்கும் போது தெரிவித்திருந்தார் தினமும் மதுபோதையில் இருக்கும் குடிக்கு அடிமையான ஒருவர் குடிப்பதற்காக எதுவும் செய்ய துணிந்தவர் அவருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்துகொள்ள முடியும் எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது என்றார். இதன் போது மன்று குடிகாரன் சாட்சி சொல்ல கூடாது என சட்டம் சொல்லி இருக்கா? என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த சட்டத்தரணி அவ்வாறு இல்லை இந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது என கூறினார்.
தொடர்ந்து தொகுப்புரையில் அடுத்த கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் இவர் சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர் அதற்காக பல தடவைகள் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தியுள்ளார் அவர் தனது சாட்சியத்தில் 2, 3, 5, 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போது தான் வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும் தன்னுடைய வீட்டில் வைத்து தான் பொறுப்புக்கள் பகிரப்பட்டதகவும் சாட்சியமளித்துள்ளார் அத்துடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம் செய்து படுகொலை செய்யப்படும் வரையில் கூட இருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளார் அவ்வாறு எனில் அவர் சாட்சியமாக இந்த மன்றில் முற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவர் இல்லை எதிரியாக மன்றில் நிற்க வேண்டியவர் ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை.
அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்லான் இவர் மோசடி வழக்கில் குற்றவாளியாக கண்டு தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர் அவ்வாறான மோசடி குற்றச்சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா? ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம் ஆனால் இந்த குற்றத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது 6ஆம் எதிரி மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும் மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் நபர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யும் நேரடி வீடியோ காட்சிக்காக இந்த குற்றம் புரியப்பட்டதாகவும்.
இதில் முதலாவது நோக்கமாக கூறப்படும் ஒரு தலை காதல் பிரச்சனை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியம் அளிக்கவில்லை அவரிடம் பிரதான விசாரணையின் போது மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சனை ஏதேனும் இருந்ததா? மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா? என கேட்ட போது இல்லை என பதிலளித்துள்ளார் குறுக்கு விசாரணையின் போது பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதிலளித்துள்ளார் மாணவியை 6ஆம் எதிரி ஒரு தலையாக காதலித்து தொந்தரவு பண்ணி இருந்தால் மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அடுத்து சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியமளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணாக சாட்சியமளித்துள்ளனர் சுரேஷ்கரன் வீடியோ எடுத்தது தெரியாது என சாட்சியமளிக்கின்றார். மாப்பிள்ளை வீடியோ எடுத்தார்கள் என சாட்சியமளித்தார் அதேபோல் சுரேஷ்கரன் மாணவியை இழுத்து சென்றதாக சாட்சியமளித்தார் மாப்பிள்ளை மாணவியை நால்வர் கைகள் மற்றும் கால்களை பிடித்து தூக்கி சென்றதாக சாட்சியமளித்துள்ளார் அதேபோல சுரேஷ்கரன் மாணவியின் உடைகளை பாழடைந்த வீட்டுக்குள் வைத்து கழட்டியதாக சாட்சியமளித்தார் மாப்பிள்ளை பற்றைக்குள் வைத்து உடைகளை கழட்டியதாக சாட்சியமளித்தார்.
சட்ட வைத்திய அதிகாரி சாட்சியத்தின் போது மாணவியின் நகங்கலினுள் தசை துண்டுகள் இருந்ததாகவும் அதனால் அதனை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் கூறி இருந்தார் நகங்கலினுள் தசைகள் இருந்து இருப்பின் மாணவி எதிரிகளுடன் போராடியதால் அவர்களுக்கு நக கீறல்கள் ஏற்பட்டமையால் தான் எதிரிகளின் தசைகள் நகங்கலினுள் இருந்திருக்கும் அவ்வாறு எனில் மாணவியின் கைகள் சுதந்திரமாக எதிரியுடன் போராட கூடிய நிலையில் இருந்திருக்கு அவ்வாறு எனில் மாணவியின் கைகளை அழுத்தி பிடிக்கவில்லை ஆனால் கண்கண்ட சாட்சியம் என சாட்சிமளித்தவர்கள் கைகளை எதிரிகள் பிடித்து இருந்ததாக கூறினார்கள்.
அதேபோன்று மாணவியின் தலையில் ஏற்பட்ட காயம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார் ஏனெனில் விழுந்து இருந்தால் மண்டையோடு வெடித்து இருக்கும் என நான் அறிந்தவரை அது பொலிஸார் பயன்படுத்தும் பிரிஸ்ரலின் பின் பக்கத்தால் தாக்கும் போது ஏற்படும் காயமாக அமையும் இதனை மக்கள் அறிய வேண்டும் என்றார் இதன்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மன்றுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள் மக்களுக்கு கூறுவது என்றால் பார்வையாளர்களை பார்த்து கூறுங்கள் என்றனர். பின்னர் இந்த குற்ற செயலுடன் தொடர்புடைய போதுமான சான்று பொருட்கள் ஜின்டக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது அதன் பரிசோதனையில் எந்த அறிக்கையும் எதிரிகளுடன் ஒத்து போகவில்லை எனவே இந்த குற்ற சாட்டுகள் தொடர்பில் எதிரிகள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை உண்மை குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர்' என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து 4, 7, 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி கேதீஸ்வரன் தொகுப்புரையில் 'கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மாணவியின் கையை யார் பிடித்தது காலை யார் பிடித்தது என தெளிவாக சாட்சியம் அளித்தவர் வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியமளித்துள்ளார் வீடியோ எடுத்ததை பார்த்ததாக கூறிய மாப்பிள்ளையின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றது என 5ஆம் எதிரியின் சட்டத்தரணி கூறியள்ளார் அதனையே நானும் கூறுகிறேன் மற்றுமொரு முக்கியமான சாட்சியமாக முற்படுத்தப்பட்ட இப்லான் என்பவர் மோசடிக்காரன் அவர் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர் அவர் இந்த கௌரவ மன்றிலும் மோசடி சாட்சியமளித்துள்ளார் தனக்கு இந்த குற்ற செயல்கள் தொடர்பில் சுவிஸ்குமார் மாத்திரம் தான் கூறியதாகவும் வேறு எந்த எதிரிகளும் இந்த குற்ற சம்பவம் தொடர்பில் தன்னுடன் கதைக்க வில்லை என சாட்சியமளித்துள்ளார்.
அதேபோன்று தான் சிறையில் சிறைசாலை அத்தியட்சகரின் அறையில் வைத்திய பரிசோதனையை முடித்து வெளியே வந்த போதே குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகரை கண்டதாக சாட்சியமளித்தார் ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியமளிக்கையில் அவ்வாறு மருத்துவர்கள் எவரையும் தான் காணவில்லை என சாட்சியமளித்தார் அதேபோன்று தான் கடனட்டை மோசடி வழக்கில் தான் தண்டனை பெற்றதாகவும் அதுவும் தான் செய்யாத குற்றம் எனவும் தனது நண்பன் செய்த குற்றத்திற்காகவும் தான் சிறை தண்டனை அனுபவிப்பதாக சாட்சியமளித்தார் ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியமளிக்கையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதனால் தான் சிறை தண்டனை அனுபவிப்பதாக சாட்சியமளித்தார்.
இப்லான் தனது சாட்சியத்தில் கூறுகிறார் சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது அவர்கள் ஆசியா பெண்ணை கடத்தி கற்பழித்து படுகொலை செய்வதனை நேரடி வீடியோ எடுக்க வேண்டும் என சுவிஸ்குமாருடன் ஒப்பந்தம் செய்ததாக ஏன் ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா சிங்கப்பூரில் எத்தனை அழகான பெண்கள் உள்ளனர் அவ்வாறு இருக்கையில் இலங்கையில் புங்குடுதீவில் பாடசாலையில் கற்கும் மாணவி தான் வேண்டுமா? அந்த சுவிஸ் மாபியாவுக்கு. கூகுளில் தட்டினால் அனைத்தும் வந்திறங்கும் ஆசியா நாட்டின் வீடியோ வேண்டுமானாலும் வந்திறங்கும் இதற்கு ஏன் மாபியா குழு தேவை இது நம்பகத்தன்மை அற்றது சுவிஸ்குமார் ஆயுதம் கடத்தினால் அல்லது நகை கடத்தினாலாவது மாபியா குழு என்பதை நம்ப கூடியதாக இருக்கும் இந்த கதை எல்லாம் திரைப்பட கதை போன்று உள்ளது இந்த கதையை மோசடி குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றவர் சட்சியமாக கூறியுள்ளார் இதனை நம்பவே முடியாது அத்துடன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் எனது தரப்பான 4, 7, 9ஆம் எதிரி ஆகியோர் கொழும்பில் தான் நின்றனர் 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனத்தில் எனது தரப்பை சேர்ந்தவர்களை கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் இந்த மன்றில் கூறிய சாட்சி சொல்லிக்கொடுக்கபப்ட்ட பொய் சாட்சி ஆகும்.
இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 1 தொடக்கம் 22 வரையிலான சான்று பொருட்கள் எவையும் எனது தரப்பினர் குற்றவாளிகள் என காண்பதற்கு ஏதுவாக இல்லை எனது தரப்பினர் மீதான குற்ற சாட்டுக்கள் எவையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை எனவே அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நாம் மறுக்கிறோம் இந்த மன்று நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்' "என தமது தொகுப்புரைகளை நிறைவு செய்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.