Breaking News
recent

திட்டம் தீட்டியவர் சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும் குற்றம் புரிந்தவரே - பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி

வித்தியா கொலை ட்ரயல் அட்பார் மன்றின் 17ஆவது நாளான நேற்று  எதிரிகள் தரப்பு சார்பில் சட்டத்தரணிகளின் தொகுப்புரை இடம்பெற்றது இதன்போது "சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்க வேண்டும் இந்த கொலை சம்பவத்துடன் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் கூறினர்.

வழக்கில் சாட்சியமளித்த மாப்பிள்ளை எனும் குகநேசன் என்பவர் பிரதிவாதிகளுடன் கைது செய்யப்பட வேண்டியவர் எனினும் அவர் அரச தரப்பில் சாட்சியமளித்துள்ளமை தவறான விடயம் எனவும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச தரப்பு சாட்சியாளர் சுரேஸ்கரனின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனவும் எதிரிகள் தரப்பு தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டது.
கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது கறுப்பு கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது என கூறிய எதிரிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் அதனை உறுதிப்படுத்த கறுப்பு கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் நடித்து காட்டி இதன் அடிப்படையில் 7ஆம் சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய் என்றார்.
இதன்போது நீதிபதி இளஞ்செழியன் சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்பு கண்ணாடியை அணியுமாறு கூறி பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் என கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் கூறியபோது ஒருவர் கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு குறிப்பாக எதை நோக்குகின்றார் என கூற முடியாது ஆனாலும் கண்ணாடி அணிந்திருப்பவர் திரும்பும் திசையை வைத்து எதை பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டி குறித்த கறுப்பு கண்ணாடியை நீதிபதி இளஞ்செழியனும் அணிந்து நடித்து காட்டினார்.
குற்றம் இடம்பெறுவற்கு முன்னரும், அதன் பின்னருமான நடத்தைகளில் 4,7, 8, 9ஆம் எதிரிகளுடன் 5ஆம் எதிரி கூட்டாகவே இருந்துள்ளார் என சாட்சியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 2015 மே 12ஆம் திகதி காலை 11 மணியளவில் 5ஆம் எதிரி ஏனைய எதிரிகளுடன் ஹயஸ் வாகனத்தில் இருந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது ஆகவே இந்த குற்றத்தை புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறிய நீதிபதி இளஞ்செழியன்.
இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் ஆனாலும் பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது கொழும்பை பார்க்காத பிரபாகரன் சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால் இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் எனவே சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி குற்ற சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என்ற தேவை இல்லை என கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.