Breaking News
recent

ஈழத்தில் திலீபன் யாருக்காக ? அகிம்சை வழியில் போராடி மரணித்தான்!

திலீபன்_30வது   ஆண்டு
ஈழத்தின் முக்கியமானவன்..
ஈகத்தில்  முதன்மை  யானவன்..
நோன்பிருந்த நாட்கள் 12
இறக்கும் போது வயது 23,
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,
யாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவன்.

ஈழத்தின் யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பார்த்தீபன் இராசையா எனும் திலீபன் நவம்பர் 27, 1963 அன்று பிறந்தார்.
ஒரு காலத்தில் திலீபனின் நினைவுநாட்களை பெருமெடுப்பில் நினைவுகூர்ந்த ஈழ மண் இன்று மௌனித்துக் கிடக்கிறது.
காந்தியின் அகிம்சை போராட்டத்தால் சுதந்திரத்தை வென்றது காந்திய தேசம். அவ் இந்திய தேசத்தின் அதிகாரத்துக்கு எதிராக அதே அகிம்சை வழியில் போராடி ஈக மரணம் அடைந்தவர் திலீபன்.


ஈழத்தில் அமைதிப்படை எனும் பெயரில் வந்து பெரும் அராயகம் புரிந்தது இந்திய இராணுவம். இதற்கு எதிராக
ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து திலீபன் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.

1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை நல்லூரில் ஆரம்பித்தார்.பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் உண்ணவிரதம் இருந்தார் திலீபன்.

1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார்.
திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்:
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5.பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

இவரது போராட்டத்தை இறக்கும் வரையிலும் பாராது இருந்த நாடே உலகில் மிகப் பெரிய ஐனநாயக நாடு எனும் இந்திய நாடு.
இன்றுவரை இவர் பசியும் அடங்கவில்லை தாகமும் தணிய வில்லை.
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.