Breaking News
recent

நல்லாட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்! சர்வதேச விசாரணையே வேண்டும் - காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்

போலிவேடம்போடும் இந்த நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் எனத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நீதியான சர்வதேச விசாரணை மீதே தாம் நம்பிக்கைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.




வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாதக்கணக்கில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று (17-09-2017), 210ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்றுடன் (17-09-2017) 194ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தமது போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம், இன்று 206ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.யாழப்பாணம் மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இன்று 187 ஆவது நாளை எட்டியுள்ளது.

அவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 200 ஆவது நாளாக தொடர்கின்றது.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்து கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.