Breaking News
recent

பனை மர வட்டுக்குள் ஏறியவர் திடீரென நெஞ்சுவலியால் மரணம்! - கிளிநொச்சியி்ல் சம்பவம்

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் பனை மரத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்றையதினம் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் பனை ஓலை வெட்ட ஏறியவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பனைமரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்தநபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் பனை மரத்தின் வட்டுப் பகுதிக்குச் சென்று அமர்ந்துள்ளார். இதனால் பனை மரத்தின் உச்சியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் அயலவர்களின் உதவியுடன் கீழே இறக்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதிலும் உயிர் பிரிந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

44 வயதுடைய கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரண விசாரணைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.