Breaking News
recent

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபரை கைது செய்த சாவகச்சேரி பொலிஸார் !



யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களாக பருத்திதுறை நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு புலனாய்வு துறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரை யாழ்.சாவகச்சேரி பொலிஸார்  நேற்று (08)  இரவு 7:30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் பருத்திதுறை நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்  இன்று  (09)  காலை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் சாவகச்சேரி பொலிஸ் பரிசோதகர் கோகில அரியதாச உப பொலிஸ் பரிசோதகர் ஆர் பிரதீப் தலைமையிலான பண்டார,கபில, செனவிரத்தின ஆகிய குழுவினரே இக்கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.