Breaking News
recent

யாழ் தினக்குரல் ஊடகப் பணியாளரின் துவிச்சக்கரவண்டி திருட்டு

- கோப்பு காட்சி...

அச்சுவேலி- தொண்டமனாறு வீதியில் உள்ள பலநோக்கு சங்கத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று நேற்று (8) திருட்டு போயுள்ளதா பாதிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தினக்குரல் ஊடகநிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் 10ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டியே திருட்டு போயுள்ளது. பேருந்திற்காக குறித்த பெண் தினம்தோறும் துவிச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு செல்வது வழமை. 

இந் நிலையில் மாலை பணிமுடிந்து வீடு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியினை எடுத்து செல்ல முற்பட்ட போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் துவிச்சக்கரவண் களவாடப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.