Breaking News
recent

தமிழ் மக்கள் புலிகள் அல்ல: மஹிந்த அமரவீர

சர்வதேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு குழப்பத்தில் எமது சகோதர இனத்தை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


அண்மையில் வடக்கு முதல்வர், மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

ஆயுதம் திரித்த புலிகளும் இலங்கையின் மக்களே. அவர்களை அழித்து நாட்டை மீட்டெடுக்க இந்த போராட்டம் நடைபெற்றது. மாறாக தமிழ் மக்களை இலக்கு வைத்து அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் யுத்தத்தை வைத்து சில அரசியல் நகர்வுகளை காணக்கூடியதாக உள்ளது. எனினும் தமிழ் மக்களை நாம் விடுதலைப்புலிகள் என குறிப்பிடவில்லை.

வடக்கில் இராணுவம் உள்ளதைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவம் காணப்படுகின்றது. இராணுவத்தின் பங்களிப்பு என்பது யுத்தத்திற்காக மட்டும் அல்ல.

மேலும், தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையிலும் அரசாங்கம் செயற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.