Breaking News
recent

மனைவியால் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ! - வவுனியா ஓமந்தை கிழவிகுளத்தில் சம்பவம்

இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான இளம் குடும்பஸ்தர் மனைவியால் வெட்டிகொலை. வவுனியாவில் இன்று (08.09.2017) மாலை 4மணியளவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் இன்று (08.09) மாலை 4 மணியளவில் குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதால் பலியான நபரின் மனைவி உட்பட மனைவியின் சகோதரர்கள் மற்றும் மனைவியின் தந்தையும் சேர்ந்து கோடாரியால் தலையில் வெட்டியதில் பாலையா சுதாகரன் (வயது-30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியை சேர்ந்த உறவினர்களான ஜெயசீலன் தவபாலன், சிவபாலன் சிவகுமார் ,சிவபாலன் சுபாஷினி ஆகிய ஒரேகுடும்பத்தைச் மூவரும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலும் ஒருவரை தேடிவருவதாக அறியப்படுகிறது இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் பலியான நபரின் மனைவி என்பதுடன் தானே தன் கணவனை வெட்டிக்கொன்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் பலியான நபரின் உடல் பகுதிகளில் துப்பாக்கி சூட்டு காயம் காணப்படுவதால் இக்கொலையில் மர்மம் என்ன என்று பொலிஸார் விசாரனைகளை தீவிரப் படுத்தியுள்ளனர் இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.