Breaking News
recent

கிளிநொச்சியில் இன்று மாலை இரு குழுக்களிற்கிடையில் வாள்வெட்டு!

கிளிநொச்சியில் இரு குழுக்களிற்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வாள்வெட்டில் சிலர் காயமடைந்துமுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.