Breaking News
recent

வடமாகாணத்தின் முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


இதன்படி,

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும்,கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை கோணாவில், யூனியன் குளம், கன்னிகாபுரம், ஸ்கந்தபுரம், விநாயகர் குடியிருப்பு, அக்கராயன் ஆகிய பகுதிகளிலும்,வவுனியா மாவட்டத்தில் காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை முகாம், மடுக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.